/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வருவாய்த்துறை வெளிநடப்பு போராட்டம்
/
வருவாய்த்துறை வெளிநடப்பு போராட்டம்
ADDED : பிப் 21, 2025 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: வருவாய்த்துறையில் பணி அழுத்தம், நிலுவை கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்டத்தில் மாலைநேர வெளிநடப்பு போராட்டம் நடத்தினர்.
சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் வி.எஸ்., சேகர் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் தமிழரசன் நிறைவுரை ஆற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கண்ணதாசன், வட்டகிளை தலைவர் முத்தையா, சாலை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் சின்னப்பன் பேசினர்.
மாவட்ட துணை தலைவர் ஆனந்தபூபாலன் நன்றி கூறினார். மாவட்ட அளவில் 9 தாசில்தார் அலுவலகங்கள் முன் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

