ADDED : ஜன 13, 2026 05:41 AM

திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் நெற்குப்பை பேரூராட்சியில் வடிகால் வசதி கேட்டு 10 ஆண்டுகளாக குடி யிருப்புவாசிகள் போராடுகின்றனர்.
நெற்குப்பை பேரூராட்சி யில் பஸ் ஸ்டாண்ட், சார் பதிவாளர் அலுவலகம், புறவழிச்சாலை என அடிப்படை வசதிகளுக்காக மக்கள் நீண்டகாலமாக போராடி வருகின்றனர். 5 வது வார்டு ஊர்க்காவலன் தெருவில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன் இங்கு சிமென்ட் ரோடு போடப்பட்டது. அப்போது வடிகால் வசதி ஏற் படுத்தப்படவில்லை. இதே போன்று பல தெருக்களில் சிமென்ட் ரோடு போடப்பட்ட தெருக்களில் வடிகால் வசதி பின்னர் உருவாக்கப்பட்டது.
ஆனால் ஊர்க்காவலன் தெருவில் குடியிருப்பு வாசிகள் பல முறை கோரியும் பேரூராட்சியினர் நிதிப்பற்றாக்குறையை கூறி வடிகால் வசதி ஏற் படுத்த வில்லை.
எஸ்.செல்வராஜ் கூறுகை யில், 'இங்கு வடிகால் வசதி இல்லாததால் மழை நீர், கழிவுநீர் செல்ல வழியில்லை. இதனால் ரோட்டிலேயே விடப்படுகிறது. இதனால் குழந்தைகள், வயதானவர்கள் நடந்து செல்லும் போது வழுக்கி கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். 10 ஆண்டுகளாக கேட்டும் கழிவுநீர் வடிகால் கட்டப்படவில்லை. இதனால் சுகாதாரக் கேடாக நோய்த்தொற்று பரவுகிறது.' என்றார்.
