/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நடுரோட்டில் நிற்கும் மின்கம்பங்களால் ஆபத்து
/
நடுரோட்டில் நிற்கும் மின்கம்பங்களால் ஆபத்து
ADDED : பிப் 08, 2025 05:07 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சாலை அகலப்படுத்தும் பணியின் போது மின்கம்பங்களை மாற்றி அமைக்காததால் விபத்து அபாயம் உள்ளது.
முட்டாக்கட்டியில் இருந்து பிரான்மலை செல்லும் சாலை சில நாட்களுக்கு முன்பு அகலப்படுத்தப்பட்டது. இப்பணியின் போது ரோட்டோரத்தில் இருந்த மின்கம்பங்களை வேறு இடத்திற்கு மாற்றாமல் அதே இடத்தில் வைத்து ரோடு அமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்கம்பங்கள் நடுரோட்டில் ஆபத்தில் உள்ளது.
துாரத்தில் இருந்து வரும் வாகனங்கள் குறிப்பாக இரவு நேரங்களில் மின்கம்பங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எச்சரிக்கைக்காக மின்கம்பங்களில் சிவப்பு துணிகளை அப்பகுதி மக்கள் கட்டி வைத்துள்ளனர்.
அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன் இச்சாலை முழுவதும் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மின்கம்பங்களை மாற்றியமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.