ADDED : பிப் 01, 2024 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லுாரி சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கருத்தரங்கம் நடந்தது.
முதல்வர் பெத்தாலட்சுமி தொடங்கி வைத்தார். கருத்தரங்கில் மதுரை கோட்ட நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் வரலட்சுமி சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
உதவி பொறியாளர் கீதா பேசினார். சாலை பாதுகாப்பு தொடர்பான ஆவணப்படம் மாணவ மாணவிகளுக்கு திரையிடப்பட்டது.
தமிழ் துறை தலைவர் முருகேசன், கல்லூரி உடற்கல்வி இயக்குனர் அசோக்குமார் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.