/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பலவான்குடியில் சேதமான சாலை வரத்து கால்வாய் மூடல் புகார்
/
பலவான்குடியில் சேதமான சாலை வரத்து கால்வாய் மூடல் புகார்
பலவான்குடியில் சேதமான சாலை வரத்து கால்வாய் மூடல் புகார்
பலவான்குடியில் சேதமான சாலை வரத்து கால்வாய் மூடல் புகார்
ADDED : ஜன 15, 2024 12:08 AM

காரைக்குடி : காரைக்குடி அருகே பலவான்குடி ஊராட்சியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலைகள் சேதப்படுத்தியதோடு, வரத்து கால்வாய்களையும் காணவில்லை என புகார் தெரிவித்தனர்.
கல்லல் ஒன்றியத்துக்கு உட்பட்ட பலவான்குடி ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, கடந்த வருடம் புதிதாக சாலை போடப்பட்டது.
இந்நிலையில், சூரக்குடி முதல் குன்றக்குடி வரை காவிரி கூட்டு குடிநீர் குழாய் பதிக்கும் பணி தொடங்கியது. இதனால் புதிதாக போடப்பட்ட சாலையானது, உடைக்கப்பட்டு பாதிச் சாலை மட்டுமே உள்ளது.
மீதி சாலை போடப்படாதோடு தோண்டப்பட்ட பள்ளம் மேடாக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் சாலையில் குளம்போல் தேங்கி கிடக்கிறது.
இதுகுறித்து செல்வம் கூறியதாவது, குழாய் பதிப்பிற்காக, இப்போது புதிதாக போடப்பட்ட சாலை பாதிக்கும் மேல் உடைக்கப்பட்டுள்ளது. தோண்டப்பட்ட பள்ளம் முறையாக மூடப்படாததால், தண்ணீர் நிறைந்து வீடுகளுக்குள்ளும் சாலையிலும் நிறைகிறது. மேலும் மரத்து கால்வாய் முழுவதும் அடைக்கப்பட்டதால் தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது.
ஊருக்குள் வரும் பஸ்கள் சாலையில் பதிந்து கொள்வதால் ஊருக்குள் வர மறுக்கின்றன. மேலும், குன்றக்குடியில் நடக்கும் தைப்பூசத்திற்கு சுவாமி இந்த சாலை வந்து செல்லும். சாலை மற்றும் வாரத்துக்கால்வாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.