/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் ரோட்டின் தரம் ஆய்வு
/
திருப்புவனத்தில் ரோட்டின் தரம் ஆய்வு
ADDED : ஜூலை 17, 2025 11:28 PM

திருப்புவனம்: மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து நடந்து வருகிறது.
திருப்புவனம், திருப்பாச்சேத்தி, ராஜகம்பீரம் உள்ளிட்ட நகர்ப்பகுதிகள் மட்டும் நெடுஞ்சாலைத்துறை வசம் உள்ளது. நான்கு வழிச்சாலையில் இருந்து திருப்புவனம் நகருக்குள் மட்டும் சுமார் நான்கு கி.மீ., தூரம் நெடுஞ்சாலைத்துறை வசம் உள்ள சாலையின் தரம் குறித்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆய்வு மேற்கொண்டு வரப்படுகிறது. சாலையில் இயந்திரம் மூலம் ஒரு அடி ஆழம் வரை துளையிடப்பட்டு துளை வழியாக சாலை கணக்கிடப்படுகிறது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்: ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை சாலையின் தரம் குறித்த ஆய்வு பணிகள் நடைபெறும், இந்த ஆய்வில் சாலையின் உயரம் குறைந்துள்ளதா, சாலை விரிவடைந்துள்ளதா உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை அனுப்பப்படும், அதன்பின் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை மேம்பாட்டு பணிகள் தொடங்கும், என்றனர்.