ADDED : அக் 18, 2024 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அருகே சோழபுரம் ரமணவிகாஷ் மேல்நிலை பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. தாளாளர் முத்துகண்ணன் தலைமை வகித்தார்.
ஆசிரியை செல்வகண்ணாத்தாள் வரவேற்றார். மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம், சிவகங்கை போக்குவரத்து காவல் ஆய்வாளர் சக்தி இசக்கி சாலை போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு அளித்தனர்.
பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் கணேஷ் தலைமையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.