ADDED : ஜன 30, 2025 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் போக்குவரத்து போலீஸ் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக எஸ்.ஐ., அழகுராணி ஹெல்மெட் அணிந்து சென்றவர்களிடம் ரோஜா பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
போக்குவரத்து போலீசார் சார்பில் டூவீலர்களை ஓட்டிச் செல்லும் போது ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், நான்கு சக்கர வாகனங்களை இயக்கும் போது சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும், போக்குவரத்து விதிமுறை துண்டு பிரசுரம் வாகன ஓட்டிகளிடம் வழங்கினர்.போக்கு வரத்து போலீசார் கோபாலகிருஷ்ணன், நாகராஜன் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

