ADDED : ஜன 18, 2024 06:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம் : திருப்புவனத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவை ஒட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்படுகிறது. திருப்புவனத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் தலைமையில் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் வேன், ஆட்டோ, லாரி ஒட்டுனர்களுக்கு வழங்கப்பட்டது.