/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தனியார் நிலத்தால் தடைபட்ட ரோடு பணி பேச்சுவார்த்தைக்கு பின் முடிந்தது
/
தனியார் நிலத்தால் தடைபட்ட ரோடு பணி பேச்சுவார்த்தைக்கு பின் முடிந்தது
தனியார் நிலத்தால் தடைபட்ட ரோடு பணி பேச்சுவார்த்தைக்கு பின் முடிந்தது
தனியார் நிலத்தால் தடைபட்ட ரோடு பணி பேச்சுவார்த்தைக்கு பின் முடிந்தது
ADDED : டிச 23, 2025 05:41 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் காக்காளிப்பட்டியில் தனியார் நிலத்தால் தடைபட்ட ரோடு பணி பேச்சுவார்த்தைக்கு பின் முழுமையாக போடப்பட்டது.
திருப்புத்துார் ஒன்றியம் கோட்டையிருப்பு ஊராட்சி காக்காளிப்பட்டி கிராமத்தில் கட்டையன்பட்டி விலக்கிலிருந்து தேரேந்தல்பட்டி வரை 1.6 கி.மீ.நீளத்திற்கு ரோடு போட அனுமதியானது.
முதல்வர் கிராமச் சாலைத் திட்டத்தில் ரூ 69.23 லட்சம் மதிப்பில் தார் ரோடு போடும் பணி 3 மாதங்களுக்கு முன்பு துவங்கியது. அப்போது ரோட்டின் ஒரு பகுதியில் தனியார் இடம் இருப்பதால் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து சர்ச்சைக்குரிய 30 மீ இடத்தை விட்டு மற்ற இடத்தில் தொடர்ந்தனர்.
கிராமத்தினர் முழுமையாக ரோடு போட வலியுறுத்தி டிச.12ல் சாலை மறியல் செய்ய முயன்றனர். போலீசார் டிச.19 ல் அமைதிப்பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று சமாதானப்படுத்தினர். பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இதனையடுத்து நேற்று மீண்டும் கிராமத்தினர் போராட் டத்திற்கு கூடினர்.
இன்ஸ்பெக்டர்கள் பிராவின் டேனி, சசிக் குமார், கிராமத்தினர், பட்டாதாரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் சண்முகவடிவேல், வி.ஏ.ஓ.சிவக்குமார் பேச்சு வார்த்தை நடத்திய பின் நில உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்து முடிவுக்கு வந்தனர். தொடர்ந்து விடுபட்ட ரோடு முழுமையாக போடப்பட்டது.

