ADDED : மார் 19, 2024 11:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணியால் மக்கள் அவதிப்படுகின்றனர். இவ்வொன்றியத்தில் மதுராபுரி ஊராட்சி வேங்கைப்பட்டி மெயின் ரோட்டில் இருந்து நாடார் வேங்கைப்பட்டி வரை சாலை பழுதடைந்து இருந்தது. இதை சீரமைக்க பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லாமல் இருந்தது. இதுகுறித்து தினமலர் இதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக 33 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஜனவரியில் பணி துவங்கியது. ரோடு தோண்டப்பட்டு கற்கள் கொட்டப்பட்ட நிலையில் கடந்த ஒரு மாதமாக பணி கிடப்பில் விடப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சாலைப் பணியை தாமதமின்றி விரைந்து முடிக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

