ADDED : அக் 30, 2025 03:53 AM

திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி அருகே ரோட்டை 16 வருடங்களாக நெடுஞ்சாலைத்துறை பராமரிக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மாரநாடு கண்மாய் கரையை ஒட்டி திருப்பாச்சேத்தி தெற்கு பகுதியில் நெல், வாழை, கரும்பு, உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன. பிச்சைப்பிள்ளையேந்தலில் இருந்து மாரநாடு கண்மாய் கரையை ஒட்டி கட்டனுார் 2.2 கி.மீ., துாரத்திற்கு படமாத்துார் சர்க்கரை ஆலை நிறுவனம் தார்ச்சாலை அமைத்து அதனை நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைத்து விட்டனர்.
2009ல் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை புதுப்பிக்கப்பட்டது. அதன் பின் எந்த வித பராமரிப்பு பணியும் மேற்கொள்ளப்படவில்லை. ரோடு குண்டும், குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு உள்ளது. விவசாயிகள் விதை, உரம் உள்ளிட்டவைகளை கொண்டு செல்ல முடியாமலும், விளைவித்த பொருட்களை விற்பனைக்கு அனுப்ப முடியாமலும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

