நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம் : திருப்புவனம் அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சாலைப்பணி தொடக்க விழா நடந்தது.
கீழராங்கியனில் இருந்து பூம்பிடாகை வரையிலான சாலை சேதமடைந்து போக்குவரத்திற்கு சிரமமாக இருந்தது. இதனையடுத்து 20 லட்ச ரூபாய் செலவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் புதிய சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.
விழாவிற்கு திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் மருதுபாண்டியன் வரவேற்றார். கிளை செயலாளர் ஜெயகுமார், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் காளிதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

