/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அறிவிப்பு இல்லாமல் ரோட்டில் தடுப்பு
/
அறிவிப்பு இல்லாமல் ரோட்டில் தடுப்பு
ADDED : ஆக 02, 2025 11:01 PM

சிவகங்கை : சிவகங்கையில் மேலுார் ரோட்டில் அறிவிப்பு இல்லாமல் ரோட்டில் தடுப்பு வைத்து மறைத்ததால் காமராஜர் காலனி, தென்றல் நகர், சக்கந்தி செல்ல முடியாமல் மக்கள் சிரமப்பட்டனர்.
சிவகங்கை சஞ்சய் நகரில் இருந்து மலம்பட்டி வரை 11.5 கி.மீ., இரு வழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற ரூ.78 கோடி ஒதுக்கி பணி நடந்து வருகிறது.
தற்போது பழைய கோர்ட் வாசலில் இருந்து எஸ்.பி., முகாம் அலுவலகம் வரை சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக ரோட்டின் நடுவே டிவைடர் அமைக்க பழைய கோர்ட் வாசல் பகுதியில் பெண்கள் மேல்நிலைபள்ளி அருகே தடுப்பு வைத்து ரோட்டை மறைத்துள்ளனர்.சிவகங்கையில் இருந்து மேலுார் செல்லும் பஸ்கள் மதுரை ரோட்டில் சென்று சுற்றுச் சாலை வழியாக செல்ல வேண்டியுள்ளது.
நகரில் இருந்து காமராஜர் காலனி, தென்றல் நகர், தென்னளிவயல் உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் மக்கள் கோகுலேஹால் தெரு வழியாக செல்கின்றனர். சிலர் காஞ்சிரங்கால் வழியாக செல்கின்றனர்.
அறிவிப்பு இல்லாமல் திடீரென தடுப்பு வைத்து ரோட்டை மறைத்ததால் அந்த பகுதி மக்கள் தடுப்பு வரை வந்து மீண்டும் சுற்றி செல்லும் சூழல் ஏற்பட்டது.
போக்குவரத்து எஸ்.ஐ., பார்த்திபன் கூறுகையில், மேலுார் ரோட்டில் பழைய கோர்ட் முதல் சுற்றுச்சாலை வரை சாலைப்பணி நடைபெறுகிறது.
இதனால் 15 நாட்களுக்கு இந்த ரோட்டில் போக்குவரத்து தடை செய்வதற்காக ரோட்டின் இரு புறமும் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது.
நகரில் இருந்து மேலுார் செல்வபர்கள் மதுரை ரோடு வழியாக சுற்றுசாலையை பயன்படுத்தி செல்ல வேண்டும்.
காமராஜர் காலனி, சஞ்சய் நகர், காஸ் கோடவுன் உள்ளிட்ட பகுதிக்கு டூவீலரில் செல்பவர்கள் கோகுலே ஹால் வழியாக செல்லலாம்.
15 நாட்களுக்குள் சாலை பணியை முடித்து விடுவதாக உத்தரவாதம் அளித்துள்ளனர் என்றார்.