சாலையோர மரத்திற்கு தீ வைப்பு சுற்றுப்புற சூழல் கடும் பாதிப்பு
சாலையோர மரத்திற்கு தீ வைப்பு சுற்றுப்புற சூழல் கடும் பாதிப்பு
ADDED : செப் 11, 2026 01:50 PM
திருப்புவனம், செப். 12-
திருப்புவனத்தில் தொடர்ச்சியாக சாலையோரம் குப்பை கொட்டி தீ வைப்பதால் நிழல் தரும் மரங்கள் கருகி வருவதுடன் சுற்றுப்புற சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
திருப்புவனத்தில் தினசரி சேகரிக்கப்படும் குப்பையை சாலையோரம் கொட்டி வருகின்றனர். நகர் பகுதியில் சாலையோரம் நிழல் தரும் மரங்கள் இருந்தன. தொடர்ச்சியாக குப்பைக்கு தீ வைப்பதால் பல மரங்கள் கருகி விட்டன. தற்போது இருக்கும் மரங்களுக்கும் குப்பையை கொட்டி தீ வைப்பதால் மரங்கள் கருகி வருகின்றன.
பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் கழிவு பொருட்களில் தொடர்ச்சியாக தீ வைப்பதால் அதிலிருந்து வேதிப்பொருள் உற்பத்தியாகி காற்றில் கலந்து பொதுமக்கள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
திருப்புவனம் நகரை சுற்றிலும் குப்பை கொட்டி தீ வைப்பதால் பொதுமக்கள் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது . எனவே அரசு திருப்புவனத்தில் குப்பைகளை தரம் பிரித்து அழிக்க வேண்டும் என்றும், சாலையோரம் நிழல் தரும் மரங்களுக்கு அருகில் குப்பைகளை கொட்டி தீ வைத்து மரங்களை எரிப்பதை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
