/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாலையோர கிணறுகளுக்கு தடுப்புகள் தேவை
/
சாலையோர கிணறுகளுக்கு தடுப்புகள் தேவை
ADDED : டிச 30, 2024 07:16 AM
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே ஆபத்தை விளைவிக்கும் சாலையோரக் கிணறுகளுக்கு தடுப்புச் சுவர் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இவ்வொன்றியத்தில் மேலப்பட்டியில் இருந்து பிரான்மலை செல்லும் ரோடு அகலப்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இச்சாலை ஓரத்தில் நான்கு இடங்களில் விவசாய தோட்டங்களில் இருந்த திறந்தவெளிக் கிணறுகள் அச்சுறுத்தி வந்தன. தற்போது சாலை அகலப்படுத்தப்படும் பட்சத்தில் இந்த கிணறுகள் அனைத்தும் சாலையை ஒட்டி அமைந்துவிடும். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்லும்போது மீண்டும் விபத்து அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே இச்சாலையை அகலப்படுத்தும் போதே, கிணறுகள் உள்ள பகுதியில் உயரமான தடுப்புச் சுவர்களை அமைத்து விபத்துகள் நடைபெறாமல் தடுக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.