/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரோட்டோர சந்தை: பொதுமக்கள் கோரிக்கை
/
ரோட்டோர சந்தை: பொதுமக்கள் கோரிக்கை
ADDED : ஜன 30, 2024 01:50 AM
திருப்புவனம் : திருப்புவனத்தில் ரோட்டை ஆக்கிரமித்து சந்தை நடத்துவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்புவனத்தில் வாரம்தோறும் செவ்வாய் கிழமை காலை 5:00 முதல் 10:00 மணி வரை கால்நடை சந்தையும் அதன்பின் காய்கறி சந்தையும் நடைபெறும். திருப்புவனத்தைச் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமமக்கள் வாரச்சந்தையில் பொருட்கள் வாங்குவதால் 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வது வழக்கம்.
வாரச்சந்தைக்கு போதிய இடம் இருந்தாலும் வியாபாரிகள் பலரும் மதுரை-ராமேஸ்வரம் ரோட்டை ஆக்கிரமித்தே கடைகள் அமைத்து வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் வாரம்தோறும் செவ்வாய் கிழமை எந்த வாகனங்களும் திருப்புவனத்தை கடக்க முடியவில்லை.
சாலையை ஆக்கிரமித்து கடைகள் இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே வாகனங்களை இயக்குகின்றனர்.
கடந்த சில வாரங்களாக போலீசார் கடும் நடவடிக்கை எடுத்த நிலையில் கடந்த வாரம் போலீசார் தைப்பூச திருவிழா பாதுகாப்பு பணிக்கு சென்றதால் வியாபாரிகள் மீண்டும் ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டனர்.
இன்று (செவ்வாய் கிழமை) சந்தை நடைபெற உள்ள நிலையில் ரோட்டோர சந்தையை நிரந்தரமாக தடுக்க போலீசார் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.