/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஓராண்டில் சிதைந்த ரோடு ரூ.1 கோடி வீணானது
/
ஓராண்டில் சிதைந்த ரோடு ரூ.1 கோடி வீணானது
ADDED : அக் 09, 2025 04:41 AM

சிவகங்கை : சிவகங்கை அருகே ஒய்யவந்தான் விலக்கில் இருந்து ராணியூர் வரை புதிதாக போடப்பட்ட ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளதாக அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர்.
நாட்டரசன்கோட்டை அருகே ஒய்யவந்தான் விலக்கில் இருந்து ராணியூருக்கு ரூ.1 கோடி செலவில் முதல்வர் சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு புதிய தார்ரோடு போடப்பட்டுள்ளது.
இந்த ரோடு மதுரை தொண்டி சாலையில் இருந்து பிரிந்து ராணியூர் வரை இரண்டரை கிலோமீட்டருக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோடு வழியாகத்தான் நாட்டரசன்கோட்டை சிவகங்கை பகுதியில் இருந்து விசயமாணிக்கம், ராணியூர், சாத்தனி, உடவயல், ஒய்யவந்தான், பேச்சாத்தக்குடி, வெட்டிக்குளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல வேண்டும்.
புதியதாக ரோடு அமைத்த ஓராண்டிற்குள் ரோடு சேதமடைந்துள்ளதால் ரோட்டை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.