நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:சிவகங்கை மாவட்ட விளையாட்டுத் துறை அலுவலகத்தில் 2019ல் மாவட்ட விளையாட்டு அலுவலராக பணிபுரிந்தவர் கீதா.
இவர் 2018 - 2019ம் ஆண்டுக்கான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளை நடத்தினார். இதற்காக 8.70 லட்சம் ரூபாயை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒதுக்கியது.
ஆனால், மாநில போட்டிக்கு தேர்வான 179 வீரர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சி நடத்தியதாக ஆவணங்களை தயாரித்த கீதா, 1 லட்சத்து 23,400 ரூபாய் கையாடல் செய்து உள்ளார்.
அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்தாண்டு ஜனவரியில் வழக்குப் பதிவு செய்தனர். ஏற்கனவே கீதாவிடம் விசாரணை நடத்திய நிலையில், மாநில போட்டிக்கு தேர்வான வீரர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.