/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பெண்ணிடம் ஆன்லைனில் ரூ.1.10 லட்சம் மோசடி
/
பெண்ணிடம் ஆன்லைனில் ரூ.1.10 லட்சம் மோசடி
ADDED : ஜன 04, 2024 02:16 AM
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் 29 வயது பெண். இவரிடம் ஆப் மூலம் ரூ.12 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள கார் பரிசு விழுந்திருப்பதாகவும் அல்லது அதற்கு உரிய பணத்தை பெற்றுக்கொள்ள அவரது வீட்டிற்கு கடிதம் வந்துள்ளது.
கடிதத்தில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டு அந்த பெண் பேசியுள்ளார். அதில் பேசிய நபர் பணம் பெறுவதற்கு டாக்குமென்ட் கட்டணம், ஜி.எஸ்.டி. உள்ளிட்ட காரணங்களைக் கூறி பணம் அனுப்புமாறு கூறியுள்ளார்.
அவர் கூறியதை நம்பிய அந்த பெண் அந்த நபர் அளித்த வங்கி எண்ணிற்கு 28 தவணைகளாக ரூ.ஒரு லட்சத்து 10 ஆயிரம் அனுப்பியுள்ளார். பணத்தை பெற்றுகொண்ட அந்த நபர் மேலும் பணம் அனுப்புமாறு கூறியுள்ளார்.
சந்தேகம் அடைந்த அந்த பெண் இழந்த பணத்தை மீட்டு தருமாறு சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். சைபர் கிரைம் போலீசார் ஏமாற்றியவர்களின் வங்கி எண்களை கொண்டு விசாரிக்கின்றனர்.