/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் 6 மாதத்தில் ரூ.11,291 கோடி மாற்றம்
/
டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் 6 மாதத்தில் ரூ.11,291 கோடி மாற்றம்
டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் 6 மாதத்தில் ரூ.11,291 கோடி மாற்றம்
டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் 6 மாதத்தில் ரூ.11,291 கோடி மாற்றம்
ADDED : நவ 28, 2024 05:16 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் வங்கி வாடிக்கையாளர்கள் 6 மாதத்தில் 52 லட்சத்து 43 ஆயிரத்து 929 முறை ரூ.11,291 கோடி வரை டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்துள்ளனர்.
மத்திய அரசு காகிதம் இல்லாத நிர்வாகத்தை கொண்டு வரும் நோக்கில் வங்கிகளில் சேமிப்பு கணக்கு துவக்கியோருக்கு டிஜிட்டல் பண பரிவர்த்தனை திட்டத்தை கொண்டு வந்தது.அலைபேசி கையில் இருந்தால் போதும் செல்லும் இடத்திற்கெல்லாம் தேவைப்படும் பணத்தை செலவிடலாம். அந்த வகையில் இன்றைக்கு குக்கிராமங்கள் முதல் நகரம் வரை அனைத்து வர்த்தக நிறுவனங்களில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்து விட்டன.
மத்திய அரசின் இத்திட்டம் மக்களுக்கு எளிமையாகி விட்டது. இதன் மூலம் பணம் திருட்டு போகும் என்ற அச்சமும் மக்களுக்கு ஏற்படாது. சிவகங்கை மாவட்டத்தில் தேசிய வங்கி கிளைகள் 308 உள்ளன. இந்த வங்கி கிளைகளில் சேமிப்பு கணக்கு துவக்கியுள்ளோர் டிஜிட்டல் பணி பரிவர்த்தனை அதிகளவில் செய்து வருகின்றனர். 2024 ஏப்., முதல் செப்., வரையிலான 6 மாதங்களில் மட்டுமே 52 லட்சத்து 43 ஆயிரத்து 929 டிஜிட்டல் பணி பரிவர்த்தனை மூலம் ரூ.11,291 கோடி வரை பரிமாற்றம் செய்துள்ளனர்.
அதே போன்று 2023 ஏப்., முதல் செப்., வரையிலான காலத்தில் 17 லட்சத்து 75 ஆயிரத்து 2,240 பரிவர்த்தனை மூலம் ரூ.4,693 கோடி மட்டுமே பரிமாறப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழில் வளர்ச்சி இல்லாத சிவகங்கை மாவட்டத்தில் கூட வங்கிகளின் சேவை மக்களுக்கு பெரிதும் பலன் அளிக்கும் விதத்தில் உள்ளது.