/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிள்ளையார்பட்டி கோவிலில் ரூ.1.71 கோடி கையாடல்
/
பிள்ளையார்பட்டி கோவிலில் ரூ.1.71 கோடி கையாடல்
ADDED : நவ 10, 2025 11:43 PM

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் டிரஸ்ட்டில், தற்போது பொறுப்பாளர்களாக இருப்பவர்கள் குமரப்பன், 68, பழனியப்பா, 69. இந்த டிரஸ்டில், 2022- - -23ல் சாமிநாதன், தண்ணீர்மலையு; 2023- - 24ல் எஸ்.பி.முத்துராமன், பேயப்பன் ஆகியோர் பொறுப்பாளர்களாக இருந்துள்ளனர்.
மதுரையில் உள்ள டிரஸ்டிற்கு சொந்தமான இடத்தை மீட்டு ஒப்படைக்க எஸ்.பி., முத்துராமன், பேயப்பன், அருணாச்சலம், சாமிநாதன், தண்ணீர்மலை, நாராயணன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். குமரப்பன், பழனியப்பன் மதுரை சொத்து மீட்பு சம்பந்தமாக செலவு கணக்கை ஆய்வு செய்தனர்.
அதில், 1 கோடியே 36 லட்சத்து 41,௦௦௦ ரூபாய் பாலமுருகன் என்பவருக்கு பட்டுவாடா செய்துள்ளனர். மேலும், எவ்வித ரசீதுகளும் இன்றி, 33 லட்சத்து 63,400 ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து எஸ்.பி.முத்துராமன், பேயப்பன், அருணாச்சலம், சாமிநாதன், தண்ணீர்மலை, நாரயணன், பாலமுருகன் உள்ளிட்ட, ஏழு பேர் டிரஸ்ட்க்கு சொந்தமான, 1 கோடியே 71 லட்சத்து 23,௦௦௦ ரூபாயை கையாடல் செய்துள்ளதாக குமரப்பன், பழனியப்பா ஆகியோர் புகார் அளித்தனர். ஏழு பேர் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

