/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிரதமரின் வீடு, கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.223.69 கோடி ஒதுக்கீடு
/
பிரதமரின் வீடு, கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.223.69 கோடி ஒதுக்கீடு
பிரதமரின் வீடு, கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.223.69 கோடி ஒதுக்கீடு
பிரதமரின் வீடு, கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.223.69 கோடி ஒதுக்கீடு
ADDED : ஏப் 29, 2025 05:16 AM
சிவகங்கை: சிவகங்கையில் வளர்ச்சி துறையின்மூலம் பிரதமரின்வீடு, மாநில அரசின் கனவு இல்லம், ரோடு மேம்பாடு திட்டங்களை செயல்படுத்த அரசு நடப்பாண்டிற்கு (2025--2026) ரூ.223.69 கோடி ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தில் வசிக்கும் மக்களில் 51.5 சதவீதம் பேர் கிராமங்களில் தான் வசிக்கின்றனர். அவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துதரும் நோக்கில், ஊரக வளர்ச்சி துறை முகமை மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக வீடில்லாத ஏழைகளுக்கு மத்திய அரசு நேரடியாக பிரதமரின் வீடு, மாநில அரசின் கனவு இல்லம், நபார்டு வங்கி உதவியுடன் ரோடு மேம்பாடு, கிராம ரோடுகள் புதுப்பித்தல், நமக்கு நாமே திட்டம் என பல்வேறு வகையில் கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 445 கிராம ஊராட்சிகளுக்கு உட்பட்ட குக்கிராமங்களில் இது போன்ற வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
ரூ. 223.69 கோடிக்கு வளர்ச்சி பணி
நடப்பாண்டு பிரதமரின் வீடு திட்டத்தில் 307 வீடுகளுக்கு ரூ.7.37 கோடி, மாநில அரசின் கனவு இல்லம் திட்டத்தில் 1000 வீடுகள் கட்ட ரூ.35 கோடி, 294 ஊரக வீடுகள் பராமரிப்பு திட்டத்திற்கு ரூ.2.32 கோடி, 442 கண்மாய்களை துார்வாரி, மடைகளை சீரமைக்க சிறுபாசன கண்மாய்கள் புத்துயிர் ஊட்டும் திட்டத்திற்காக ரூ.34.30 கோடி, நமக்கு நாமே திட்டத்தில் 6 பணிகளுக்கு ரூ.1.05 கோடி, 15 வது நிதிக்குழு மானிய நிதியின் மூலம் ஆரம்ப, துணை சுகாதார நிலையம், வட்டார மருத்துவ மையம் என 5 கட்டடங்கள் கட்ட ரூ.2.51 கோடி, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 621 பணிகளுக்கு ரூ.33.54 கோடி, நபார்டு வங்கி நிதி உதவி திட்டத்தில் 26 சாலைகள் மேம்பாட்டிற்கு ரூ.35.29 கோடி, முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 72 இடங்களில் சாலைகளை மேம்படுத்த ரூ.31.72 கோடி என ஒட்டு மொத்தமாக இம்மாவட்டத்தில் நடப்பாண்டு ரூ.223.69 கோடிக்கு பணிகள் நடைபெற உள்ளது.

