/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தையல் தெரிந்த 10 பேர் குழுவிற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி திட்டம்
/
தையல் தெரிந்த 10 பேர் குழுவிற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி திட்டம்
தையல் தெரிந்த 10 பேர் குழுவிற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி திட்டம்
தையல் தெரிந்த 10 பேர் குழுவிற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி திட்டம்
ADDED : நவ 10, 2025 12:23 AM
சிவகங்கை: பிற்பட்ட, மிக பிற்பட்ட, சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த தையல் தொழில் தெரிந்த 10 பேர் கொண்ட குழுவிற்கு ரூ.3 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் தையல் தொழில் தெரிந்த, 10 பேர் கொண்ட குழுவினருக்கு, பொருளாதார மேம்பாட்டிற்காகவும், ஆயத்த ஆடை உற்பத்தி யூனிட் ஏற்படுத்திட ஒரு குழுவிற்கு (10 பேர் கொண்டு ஆண், பெண் குழு) ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்பட உள்ளது. குறைந்தது 20 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். குழுவில் உள்ள உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருத்தல் வேண்டும்.
குழுவில் உள்ள 10 பேர்களுக்கும் தையல் தொழில் நன்கு தெரிந்திருக்க வேண்டும். குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவன துறையில் பயிற்சி பெற்ற குழு மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண், ஆதரவற்ற விதவைகளால் அமைந்த குழுவிற்கு முன்னுரிமை தரப்படும். இந்த நிதி உதவியை பெற விரும்பும் குழுவினர், சிவகங்கை கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் உள்ள மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலகத்தில் உரிய ஆணவங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.