/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நிதி நிறுவனத்தில் ரூ.3 லட்சம் கடன்
/
நிதி நிறுவனத்தில் ரூ.3 லட்சம் கடன்
ADDED : நவ 23, 2025 04:19 AM
சிவகங்கை: சிவகங்கை அருகே இளைஞருக்கு நிதி நிறுவனத்தில் ரூ.3 லட்சம் கடன் பெற்றுத் தருவதாக கூறி பணம் மோசடி செய்தவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் பச்சேரி பகுதியை சேர்ந்த 28 வயது இளைஞர். இவரை அலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர் தனியார் நிதி நிறுவனத்தின் மூலம் ரூ.3 லட்சம் கடன் பெற்றுத் தருவதாக பேசி யுள்ளார்.அதை நம்பிய இளைஞர் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு 7 தவணை களாக ரூ.11 ஆயிரத்து 260 செலுத்தினார். பணத்தை பெற்ற அந்த நபரை அதன் பின்பு தொடர்பு கொள்ள முடியவில்லை. பணத்தை இழந்த அந்த இளைஞர் சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
முதியவரிடம் மோசடி மானாமதுரை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 65 வயது முதியவர். இவர் கடந்த அக்.மாதம் முகநுால் பதிவில் ஆன்லைன் முதலீடு குறித்து விளம்பரம் பார்த்தார். அதில் உள்ள இணையதளப் பக்கத்தில் தொடர்பு கொண்டார். அதன் பின்பு ஒருவர் அந்த முதியவரிடம் வாட்ஸ் ஆப்பில் பேசினார். அதில் பேசிய நபர் ஒரு வங்கி கணக்கு கொடுத்து அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி அந்த முதியவரை நம்ப வைத்தார்.
அவர் கூறியதை நம்பிய முதியவர் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.38 ஆயிரத்து 178 முதலீடு செய்தார். பணத்தை பெற்ற அந்த நபர் முதலீடு செய்ததற்கான லாபம் கொடுக் காமல் ஏமாற்றினார்.
இழந்த பணத்தை மீட்டு தருமாறு முதியவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
ஓடிபி கேட்டு பணம் திருட்டு காரைக்குடி அருகே கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் 28 வயது இளைஞர். அவரிடம் வங்கியில் இருந்து பேசுவது போல் ஒருவர் போனில் பேசியுள்ளார்.
பேசிய நபர் அந்த இளைஞருக்கு வங்கி பாஸ்புக், ஏடிஎம் கார்டு தருவதாக கூறி ஓடிபி எண் கேட்டுள்ளார். ஓடிபி எண்ணை அந்த இளைஞர் கொடுத்துள்ளார்.
அந்த இளைஞரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரத்து 986 திருடப்பட்டது. இது குறித்து அந்த இளைஞர் சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

