/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரூ.400 கோடி மோசடி நிதி நிறுவன இயக்குநர் கைது
/
ரூ.400 கோடி மோசடி நிதி நிறுவன இயக்குநர் கைது
ADDED : ஜன 25, 2024 01:41 AM

சிவகங்கை:காரைக்குடியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.400 கோடி மோசடியில் தேடப்பட்டு வந்த இயக்குநரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை தலைமை இடமாகக் கொண்டு 'ஆலயம்' என்ற நிதி நிறுவனம் செயல்பட்டது. டெபாசிட்டுக்கு கூடுதல் வட்டி உள்ளிட்ட கவர்ச்சி அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் முதலீடு செய்தனர். ரூ.400 கோடி வரை பொதுமக்களிடம் வசூல் செய்யப்பட்டது. 2022ல் நிதி நிறுவனத்தினர் தலைமறைவாகி விட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் சிவகங்கை மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் நிதி நிறுவனத்தை சேர்ந்த இயக்குநர்கள் உள்ளிட்ட 44 பேர் மீது வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிறுவனத்தின் இயக்குநரான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள வலசை கிராமத்தை சேர்ந்த சுரே ைஷ பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., ஸ்ரீராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். சுரேஷை மதுரை பொருளாதார குற்றத்தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.