ADDED : ஏப் 04, 2026 03:56 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை:சிவகங்கை மதுரை ரோடு செக்போஸ்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் உரிய ஆவணம் இன்றி ரூ.96 ஆயிரத்தை மாட்டு வியாபாரியிடம் இருந்து கைப்பற்றினர்.
சிவகங்கை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளர் சரவணன், எஸ்.எஸ்.ஐ., சிவக்குமார், பி.எஸ்.எப்., ஏ.எஸ்.ஐ., பழனி உள்ளிட்ட தேர்தல் பறக்கும் படையினர் மதுரை ரோட்டில் உள்ள செக்போஸ்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
மதுரையில் இருந்து சிவகங்கை வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர். அதில் இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தை சேர்ந்த மாட்டு வியாபாரி கருப்பையா 58 வந்தார். அவர் மதுரையில் மாட்டை விற்றுவிட்டு உரிய ஆவணம் இன்றி ரூ.96 ஆயிரம் வைத்திருந்தார். அந்த பணத்தை கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படையினர் உரிய ஆவணத்தை காட்டி பணத்தை பெற்றுச் செல்லுமாறு கூறினர்.
