/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய போர்மேன் கைது
/
ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய போர்மேன் கைது
ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய போர்மேன் கைது
ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய போர்மேன் கைது
ADDED : செப் 20, 2024 02:24 AM

திருப்பாச்சேத்தி:சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி மின்வாரிய போர்மேன் விவசாயியிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் துாதையைச் சேர்ந்தவர் சோமசுந்தரம்.
விவசாயியான இவரது தென்னந்தோப்பில் மின் கம்பம் சாய்ந்த நிலையில் இருப்பதால் மின்கம்பிகளும் தாழ்வாக சென்றது.இதனால் தென்னந்தோப்பினுள் தண்ணீர் பாய்ச்சவோ, தேங்காய் வெட்டவோ முடியவில்லை. இதுகுறித்து திருப்பாச்சேத்தி மின்வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.
உதவி மின் பொறியாளர் போர்மேன் கண்ணனை 46, அழைத்து சரி செய்ய உத்தரவிட்டார். ஆனால் போர்மேன் கண்ணன் , சோமசுந்தரத்திடம் இரண்டாயிரம் ரூபாய் தந்தால் தான் சரி செய்ய முடியும் என தெரிவித்தார். இதுகுறித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., ஜான்பிரிட்டோவிடம் புகார் செய்தார்.
நேற்று காலை திருப்பாச்சேத்தி மின்வாரிய அலுவலகத்தில் இருந்த போர்மேன் கண்ணனிடம், சோமசுந்தரம் ரசாயனம் தடவிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வழங்கும் போது அவரைகையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சேதுராஜன், எஸ்.ஐ., கண்ணன் உள்ளிட்ட போலீசார் பிடித்து கைது செய்தனர். பின் அலுவலகத்தில் கண்ணனின் மேஜையை சோதனையிட்டனர்.