/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000
/
ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000
ADDED : ஜூலை 30, 2025 10:01 PM
சிவகங்கை; சிவகங்கையில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அன்புக்கரங்கள் திட்டத்தில் வயது 18 வரை மாதம் ரூ.2 ஆயிரம் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மாவட்ட அளவில் பெற்றோர்களை இழந்தவர், ஒரு பெற்றோரை இழந்தும், ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகள், உறவினர்கள் பாதுகாப்பில் உள்ள குழந்தைகளை பாதுகாக்கும் விதமாக அவர்கள் பள்ளி படிப்பு முதல் உயர்கல்வி வரை படிக்க ஏதுவாக, வயது 18 வரை அன்புக்கரங்கள் திட்டத்தில் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இத்துடன் மட்டுமின்றி உயர்கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற அந்தந்த பகுதியில் நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று, மனு செய்யலாம். அதை விடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, குழந்தையின் வயது (பிறப்பு, மாற்று, மதிப்பெண் ) சான்று, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய நகலுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம், என்றார்.