UPDATED : செப் 22, 2026 04:44 PM
ADDED : செப் 22, 2026 04:41 PM
சிவகங்கை:ஊராட்சி செயலர்களுக்கு ஓய்வூதியம், பிற சலுகைகளை வழங்க வேண்டும் உட்பட 18 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். சிவகங்கையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கரசுப்பிரமணியன், குமரேசன் வாழ்த்துரை வழங்கினர். பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
காளையார்கோவிலில் லிங்கேஸ்வரன் தலைமையில், பொருளாளர் குணசேகரன், முன்னாள் மாநில செயற்குழு சுப்பிரமணியன், கண்ணப்பன் பங்கேற்றனர். திருப்புத்துாரில் நிர்வாகி சகுந்தலா தலைமை வகிக்க நிர்வாகிகள் உமாராணி, இளஞ்செழியன், விஜயகுமார் பங்கேற்றனர். திருப்புவனத்தில் சங்க மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். சாலை பணியாளர் சங்க மாநில துணை தலைவர் பிச்சை வாழ்த்துரை வழங்கினார். சிவகங்கை கலெக்டர் அலுலகம் முன் கார்த்திக் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மாரிமுத்து, கோவிந்தசாமி பங்கேற்றனர். கல்லலில் இதயகண்ணன், சாக்கோட்டையில் முருகன், தேவகோட்டையில் சிவக்குமார், உட்கோட்ட அலுவலகத்திற்கு ராஜ்குமார் தலைமை வகித்தனர்.
