ADDED : செப் 19, 2025 02:12 AM
சிவகங்கை: ஊரக வளர்ச்சித்துறையில் அவுட்சோர்சிங் முறையில் அலுவலர்களை நியமிப்பதை கண்டித்து மாவட்ட அளவில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மகளிர் மேம்பாட்டு நிறுவனம், ஊரக வாழ்வாதார இயக்கம், கிராமப்புற மாற்று திட்டங்களில் பணிபுரியும் இணை இயக்குனர், உதவி திட்ட அலுவலர், உதவி இயக்குனர், பி.டி.ஓ., ஆகிய நிரந்தர பணியிடங்களுக்கு மாற்றாக அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்த முறையில் பணியமர்த்திட அரசு ஆணை வெளி யிட்டுள்ளது.
இதனை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சிவகங்கை ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் லுாயிஸ் ஜோசப் பிரகாஷ் தலைமை வகித்தார். செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
சிவகங்கையில் ஒன்றிய தலைவர் ராஜேஷ்குமார், இளையான்குடியில் ஒன்றிய தலைவர் பிரபாகரன், திருப்புத்துாரில் ஒன்றிய செயலாளர் சின்னையா, சாக்கோட்டையில் வட்டார தலைவர் ரீகன், காளையார்கோவிலில் ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன், திருப்புவனத்தில் இளந்தேவன், தேவகோட்டையில் முருகேசன், கண்ணங்குடியில் மகாலிங்கம், கல்லலில் ஒன்றிய தலைவர் அன்னலட்சுமி, மானாமதுரையில் ஒன்றிய செயலாளர் ராஜேஸ்வரன், சிங்கம்புணரியில் ஒன்றிய தலைவர் பாண்டி செல்வன், சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் ஜெயபாண்டி ஆகியோர் தலைமை வகித்தனர்.