தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஊரக வளர்ச்சித்துறையினர் 'ஸ்டிரைக்'  கிராமப்புற பணிகள் பாதிப்பு 

 ஊரக வளர்ச்சித்துறையினர் 'ஸ்டிரைக்'  கிராமப்புற பணிகள் பாதிப்பு 

 ஊரக வளர்ச்சித்துறையினர் 'ஸ்டிரைக்'  கிராமப்புற பணிகள் பாதிப்பு 


ADDED : பிப் 12, 2026 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 05:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகங்கை: அரசின் இலவச கனவு இல்லத்திற்கு தலா ரூ.6 லட்சம் வழங்க வேண்டும் உட்பட 18 அம்ச கோரிக்கையை முன் வைத்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஸ்டிரைக்கில்' ஈடுபட்டு வருகின்றனர்.

ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள 1,500 கிராம ஊராட்சி செயலர்கள் பணியிடத்தை நிரப்பு, ஊராட்சி செயலர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் அறிவிக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு லட்சம் அரசின் கனவு இல்லம் திட்ட வீடுகளுக்கு அரசு நிதியாக ரூ.6 லட்சம் வழங்க வேண்டும் உட்பட 18 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உள்ளாட்சிகளில் பணி பாதிப்பு மாவட்ட அளவில் ஊரக வளர்ச்சி முகமை, கலெக்டர் பி.ஏ.,(வளர்ச்சி), 12 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உதவியாளர் மு தல் பி.டி.ஓ., வரை 813 பணியிடங்களில், 640 பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் விடுப்பு, மருத்துவ விடுப்பில் சென்றவர்கள் தவிர்த்து நேற்று 448 பேர் பணிக்கு வந்திருந்த நிலையில், 167 பேர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். ஏற்கனவே கிராம ஊராட்சி செயலர்கள் 6 வது நாளாக சென்னையில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ஊரக வளர்ச்சித்துறையினரும் ஸ்டிரைக்கில் ஈடுபடுவதால் உள்ளாட்சி அமைப்புகளில் மக்களுக்கான அடிப்படை பணிகள் கடுமையாக பாதித்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us