/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க பேரவை கூட்டம்
/
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க பேரவை கூட்டம்
ADDED : ஏப் 14, 2025 05:21 AM
சிவகங்கை: சிவகங்கையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநாட்டு விளக்க மற்றும் மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் காளிமுத்து தலைமை வகித்தார். செயலாளர் ஜெயப் பிரகாஷ் வரவேற்றார்.
மாநில தலைவர் ரமேஷ், பொது செயலாளர் ராஜசேகர், பொருளாளர் புகழேந்தி, துணை தலைவர் செல்வக்குமார் ஆகியோர் மாநாட்டு முடிவுகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் குணசேகரன் நன்றி கூறினார். மாநில அளவில் ஊராட்சி செயலர்கள் காலிபணியிடம் நிரப்ப வேண்டும்.
பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்து, பி.டி.ஓ.,க்களுக்கு உதவி இயக்குனர் பதவி உயர்வு வழங்கு, குடிநீர் தொட்டி இயக்குபவர், துாய்மை பணியாளருக்கு ஒரே மாதிரியான சம்பளம்வழங்கு, உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பிரதிநிதிகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என தீர்மானித்தனர்.

