ADDED : நவ 25, 2024 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி சுப்பிரமணியபுரம் சத்ய ஸாயி சேவா சமிதியில், சாய்பாபாவின் 99வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.
காலை ஓம்காரம், சுப்ரபாதம், கணபதி ஹோமம் நகர சங்கீத சங்கீர்த்தத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து பிரசாந்தி, கொடியேற்றுதல் நிகழ்ச்சியும், அஷ்டோத்திர ஸஹஸ்ர நாமவெளி அர்ச்சனை, நாராயண சேவா, சாய் அஷ்டோத்திரம் மற்றும் சாய் பஜன் நடந்தது.
தொடர்ந்து இரவு, ஊஞ்சல் சேவை மற்றும் மங்கள ஆரத்தி நிகழ்ச்சியும் நடந்தது. காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை சமிதி உறுப்பினர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். மாவட்ட தலைவர், சமிதி கன்வீனர் மற்றும் உறுப்பினர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.