/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
உழவர் உற்பத்தியாளர் குழு மூலம் மதிப்பு கூட்டிய பொருள் விற்பனை
/
உழவர் உற்பத்தியாளர் குழு மூலம் மதிப்பு கூட்டிய பொருள் விற்பனை
உழவர் உற்பத்தியாளர் குழு மூலம் மதிப்பு கூட்டிய பொருள் விற்பனை
உழவர் உற்பத்தியாளர் குழு மூலம் மதிப்பு கூட்டிய பொருள் விற்பனை
ADDED : ஜன 28, 2025 05:24 AM
சிவகங்கை: மாவட்டத்தில் உழவர் உற்பத்தியாளர் குழு மூலம் மதிப்பு கூட்டிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்கலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, சிவகங்கை மாவட்ட விவசாயிகள் இணைந்து உழவர் உற்பத்தியாளர் குழு ஏற்படுத்தியுள்ளனர். மாவட்டத்தில் 10 உழவர் உற்பத்தியாளர் குழு உள்ளது.
இதன் மூலம் விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை மதிப்பு கூட்டிய பொருட்களாக மாற்றி, வணிகர்களாக உருவாகலாம். வேளாண் வணிக துறை சார்பில் 1,000 விவசாயிகள் இணைந்து, தலா ரூ.1,000 முதலீடு செய்தால், மத்திய, மாநில அரசும் பங்கீட்டு தொகை வழங்கும்.
இதன் மூலம் மதிப்புகூட்டிய பொருட்களை சந்தைபடுத்தி பயன்பெறலாம். குறிப்பாக இங்கு கொப்பரை, நெல் மற்றும் நிலக்கடலை கொள்முதல் மையம் மூலம் விவசாயிகள் பயன் பெறுகின்றனர்.
இதற்காக சிறு விவசாயிகள் கூட்டமைப்பிற்கு ரூ.20 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்பட்டுள்ளன. உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் தேங்காய், தேங்காய் நார், கருணைகிழங்கு, நிலக்கடலை, புளி, நெல் போன்ற பொருட்களை விவசாயிகளிடம் கொள்முதல் செய்து, 'இ-நாம்' செயலி மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
இது போன்ற வணிகம் மூலம் 2021- 2022ல் ரூ.12.03 லட்சம், 2022--2023 ல் ரூ.3.05 கோடி வரை வணிகம் செய்து, முதல் ஈட்டியுள்ளனர். அதே போன்று 2024- - 2025ல் மட்டுமே கொப்பரை கொள்முதல், நிலக்கடலை, நெல் கொள்முதல், தேங்காய் மட்டை, நார், மஞ்சி ஆகியவற்றை நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்து விற்பனை செய்ததின் மூலம் ரூ.5.02 கோடி வரை கிடைத்துள்ளது. இது போன்ற திட்டங்கள் மூலம் சந்தைப்படுத்த இயலாத விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்று லாபம் ஈட்டலாம்.
மேலும் சிறுவிவசாயிகள் வேளாண் வணிக கூட்டமைப்பு மூலம் நிதி உதவி அளித்ததில், செக்கு இயந்திரம், மாட்டு தீவனம் அரைக்கும் இயந்திரங்கள் என ரூ.10 லட்சம் மதிப்பீட்டிலான இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுபோன்று வேளாண் உழவர் உற்பத்தியாளர் குழு மூலம் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை மதிப்பு கூட்டி, கூடுதல் விலைக்கு விற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

