/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மடப்புரத்தில் சமபந்தி பா.ஜ., ஆர்ப்பாட்டம்
/
மடப்புரத்தில் சமபந்தி பா.ஜ., ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 04, 2024 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம் : மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் சம பந்தி விருந்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா சார்பில் கோயில் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு ஒன்றிய தலைவர் ராஜகதிரவன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ப்ரித்விராஜன் முன்னிலை வகித்தார்.
துணை தலைவர் பாண்டியராஜன், பிரபு, ஆதிநாராயணன், கண்ணதாசன், முத்துராமன், தங்க பாண்டி,வீரா,சுதாகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டம் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.