/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிரான்மலையில் சந்தனம் பூசும் விழா
/
பிரான்மலையில் சந்தனம் பூசும் விழா
ADDED : செப் 26, 2024 04:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் ஷேக் அப்துல்லா ஒலியுல்லா தர்காவில் சந்தனம் பூசும் விழா நடந்தது. செப். 14ஆம் தேதி கொடியேற்றம் நடந்தது.
10ம் நாள் மூன்று குடங்களில் சந்தனம் கரைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்ட சந்தனக்கூடு ரதத்தில் மூன்று குடங்களும் வைக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்றது. தொடர்ந்து மலையிலுள்ள தர்காவிற்கு குடங்கள் எடுத்து செல்லப்பட்டு சந்தனம் பூசும் விழா நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.