ADDED : ஜன 07, 2026 05:41 AM
அ நிறம் | அளவு
மானாமதுரை: மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 2வது வார்டான அண்ணாமலை நகர், அன்பு நகர், ராம் நகர், பட்டத்தரசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தீவிர துாய்மை பணி முகாமை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, கமிஷனர் கோபால கிருஷ்ணன் துவக்கி
வைத்தனர். நகராட்சி கவுன்சிலர் இந்துமதி, துப்புரவு ஆய்வாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர். துாய்மை பணியாளர்கள் பூங்கா மற்றும் சுப்பன் கால்வாய் பகுதியில் கருவேல மரங்களை வெட்டுதல், குப்பை அகற்றுதல். கழிவுநீர் வாய்கால்களை சுத்தம் செய்தல் பணிகளை மேற்கொண்டனர்.
