ADDED : செப் 01, 2026 04:00 AM

காரைக்குடி: காரைக்குடி மாநக ராட்சியுடன் இணைக்கப்பட்ட சங்கராபுரம் துாய்மை பணியாளர்கள், மாநகராட்சியிலிருந்து நேரடியாக சம்பளம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
ஆண்டுக்கு ரூ. 3 கோடி வருமானம் வரக்கூடிய சங்கராபுரம் பகுதியில், பத்திரப் பதிவு அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன. தவிர, நாளுக்கு நாள் குடியிருப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இங்கு துாய்மை பணியாளர்கள் 65, பேர், துாய்மை காவலர்கள் 35 பேர், ஊராட்சி தற்காலிக பணியாளர்கள் 5 பேர், உயர்நிலை நீர்த் தேக்கத் தொட்டி ஆப்பரேட்டர்கள் 23, தெருவிளக்கு பரா மரிப்பாளர் 4 செயலாளர் என 100க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வரு கின்றனர்.
மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதிலிருந்து முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை என பணியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று சங்கராபுரம் துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காரைக்குடி மாநகர நல அலு வலர் வினோத் சமாதானம் செய்தார்.
துாய்மை பணியாளர்கள் கூறுகையில், சங்கரா புரம் ஊராட்சியாக இருந்த போது நேரடியாக சம்பளம் பெற்று வந்தோம். 2025 முதல் காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. அதற்குப் பிறகு 2 மாதம் மட்டுமே நேரடி யாக சம்பளம் வழங்கப்பட்டது. பிறகு ஒப்பந்தம் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
மாநகராட்சி நேரடியாக சம்பளம் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்தப் பட்டது என்றனர்.
