/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளைஞர் உடலை வாங்க மறுப்புஎஸ்.பி., அலுவலகம் முற்றுகை
/
இளைஞர் உடலை வாங்க மறுப்புஎஸ்.பி., அலுவலகம் முற்றுகை
இளைஞர் உடலை வாங்க மறுப்புஎஸ்.பி., அலுவலகம் முற்றுகை
இளைஞர் உடலை வாங்க மறுப்புஎஸ்.பி., அலுவலகம் முற்றுகை
ADDED : பிப் 05, 2024 11:59 PM

சிவகங்கை : சிவகங்கை அருகே கீழப்பூங்குடியில் இளைஞர் துாக்கிட்டு இறந்த நிலையில் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சிவகங்கை அருகே கீழப்பூங்குடியை சேர்ந்தவர் அருண்ராஜ் 34. இவருக்கும் அதே உரை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் ஜன.29ம் தேதி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் அருண்ராஜ் மணிகண்டனை தாக்கியுள்ளார்.
இந்த வழக்கில் அருண்ராஜை மதகுபட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்த அருண்ராஜ் பிப்.3ம் தேதி ஜாமீனில் வந்துள்ளார். அன்று இரவு அருண்ராஜ் வீட்டில் சண்டை போட்டு விட்டு வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு துாங்கியுள்ளார்.
காலையில் வெகு நேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த அருண்ராஜ் பெற்றோர் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அருண்ராஜ் துாக்கிட்டு இறந்த நிலையில் இருந்ததால் மதகுபட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
போலீசார் அருண்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அருண்ராஜ் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் அருண்ராஜ் இறப்பிற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி பிப்.4 மாலை மானாமதுரை ரோட்டில் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டி.எஸ்.பி., சிபி சாய் சவுந்தர்யன் பேச்சுவார்த்தை நடத்தி இறப்பு குறித்து விசாரிப்பதாக கூறியதின்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் நேற்று அருண்ராஜ் உறவினர்கள் எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு மனுகொடுக்க சென்றனர். சிலர் ரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் தடுத்ததால் கலெக்டர் அலுவலகம் சென்றவர்களைபோலீசார் மறித்து கைது செய்தனர்.