மருத்துவமனையில் கர்ப்பிணிகள், வயிற்று வலி பிரச்னையால் பாதிக்கப்படுபவர்கள், குடல் வால்வு, சிறுநீர்ப்பை, மண்ணீரல், கல்லீரல், பித்தப்பை போன்ற உள்ளுறுப்புகளை கண்டறிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் தினசரி 100க்கும் மேற்பட்டோருக்கு ஸ்கேன் எடுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தாலுகா மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைகளில் அல்ட்ரா ஸ்கேன் எடுக்க போதிய ரேடியாலஜி டாக்டர்கள் இல்லை. அங்கு பணிபுரியும் பொது மருத்துவ டாக்டர்கள் சிலருக்கு பயிற்சி அளித்து அவர்கள் மூலமே ஸ்கேன் எடுக்கப்படுகிறது. இவர்கள் கர்ப்பிணிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கின்றனர்.
மற்ற நோய் பாதித்தவர்களை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, அல்லது அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர். தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லுாரியில் ஸ்கேன் எடுக்க ரேடியாலஜி பிரிவில் 7 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 3 பேர் அல்லது 2 பேர் தான் பணியில் உள்ளனர். இதனால் ஸ்கேன் எடுக்க வரும் நோயாளிகள் வாரக்கணக்கில் காக்க வைக்கப்படுகின்றனர்.
ரேடியாலஜி டாக்டர்கள் கூறுகையில், பெரும்பாலான அரசு மருத்துவமனையில் ரேடியாலஜிஸ்ட் துறையில் 5 பேர் பார்க்க வேண்டிய வேலையை 2 பேர் தான் பார்க்கிறோம்.
சில அரசு மருத்துவமனையில் ரேடியாலஜிட் டாக்டரே கிடையாது. பொதுவாக அரசு மருத்துவமனையில் ஒரு டாக்டர் தினமும் 100 பேருக்கு மேல் ஸ்கேன் எடுக்கின்றார்.
கர்ப்பிணிகளுக்கு மற்றும் பிற நோயாளிகளுக்கு அவசரம் கருதி உடனுக்குடன் ஸ்கேன் எடுக்கின்றோம். ஒருவர் விடுப்பு எடுத்தாலும். ஸ்கேன் எடுப்பதில் சிரமம் ஏற்படும்.
இதனால் அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகளுக்கு ஸ்கேன் எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் கூடுதல் ரேடியாலஜிஸ்ட் பணியாளர் பணி அமர்த்த அரசு தான் முன் வர வேண்டும் என்றனர்.
சிவகங்கை, டிச.1--
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ரேடியாலஜி டாக்டர்கள் பற்றாக்குறை நிலவுவதால் ஸ்கேன் எடுக்கவரும் நோயாளிகள் வாரக்கணக்கில் காத்திருக்கின்றனர்.நடவடிக்கை எடுப்பதாக அரசு உறுதி அளித்தாலும் பல மாதங்களாக இந்த நிலை தொடர்கிறது.