நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை ; நாட்டரசன்கோட்டை கே.எம்.எஸ்.சி., மகளிர் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. டாக்டர் புனிதா தலைமை வகித்தார். பள்ளி செயலர் நாகராஜன் வரவேற்றார்.
ஆசிரியை ஆரோக்கிய ஸ்டெல்லா அறிமுக உரை ஆற்றினார். தலைமை ஆசிரியர் மீனாட்சிசுந்தரி ஆண்டு அறிக்கை வாசித்தார். கல்வி, இலக்கிய போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினர்.
பள்ளிக்குழு தலைவர் கண்ணப்பன், பள்ளிக்குழு உறுப்பினர்கள் மீனா, சிட்டாள், சுப்பிரமணியன், நல்லாசிரியர் கண்ணப்பன், முன்னாள் தலைமை ஆசிரியர் மகாலட்சுமி, பள்ளி மேலாளர் சுப்பையா பங்கேற்றனர். ஆசிரியை தனலட்சுமி நன்றி கூறினார்.