நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: கோமாளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது. வட்டாரக்கல்வி அலுவலர் பாலாமணி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் பொறுப்பு வேல்முருகன் வரவேற்றார்.
ஆசிரியை சாரதா ஆண்டறிக்கை வாசித்தார். சக்கந்தி முன்னாள் ஊராட்சி தலைவர் கோமதி மணிமுத்து முன்னிலை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர் ஞானகிரேஸ் வளர்மதி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரூபாராணி, ஆசிரியர் பயிற்றுனர் தனலெட்சுமி, பேசினர். மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.