நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அருகே சோழபுரம் ரமணவிகாஷ் பள்ளி ஆண்டு விழா நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., ராஜசேகரன் தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் விஜயசரவணக்குமார், உதயகுமார் முன்னிலை வகித்தனர்.
சிவகங்கை தமிழ் சங்க நிறுவனர் ஜவஹர், தலைவர் கண்ணப்பன், ஐ.ஓ.பி., வங்கி மேலாளர் மோகன்குமார், மதுரை அரசு மருத்துவ கல்லுாரி நரம்பியல் துறை பேராசிரியர் மணிமாறன் சிறப்பு வகித்தனர். பள்ளி தாளாளர் முத்துக்கண்ணன், வசுமதி வரவேற்றனர்.
பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் வைக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் கணேஷ் ஆண்டறிக்கை வாசித்தார்.
பத்து மற்றும் பிளஸ் 2 தேர்வில் முதல்3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் கவுரவிக்கப்பட்டனர்.
ஆசிரியர் அருள் ஆரோக்கியம் தொகுத்துவழங்கினார். ஆசிரியை செல்வ கண்ணாத்தாள் நன்றி கூறினார்.

