நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோஷ்டியூர்: கண்டரமாணிக்கம் சேதுஐராணி பதின்ம மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
சேதுபாஸ்கரா கல்வி குழும தலைவர் சேதுகுமணன் முன்னிலை வகித்தார். திருப்புத்தூர் ஆ.பி.சீ.அ.கல்லூரி முதல்வர் கேப்டன் ஜெயக்குமார், தேவகோட்டை புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை சார்லஸ் மேரி,கல்லூரி செயலர் கோகிலம் குமணன், பள்ளி பொருளாளர் திருநாவுக்கரசு, பங்கேற்றனர்.
கடந்த பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசும், 100 சதவீத தேர்ச்சி பெற உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு பரிசுடன், தங்கநாணயம் வழங்கப்பட்டது.