ADDED : மார் 02, 2024 05:14 AM
தேவகோட்டை, : புளியால் அரசு உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா, பெயர் பலகை திறப்பு, மரக்கன்றுகள் நடுதல், குடிநீர் தொட்டி அடிக்கல் நடுதல் உட்பட ஐந்து விழாக்கள்மாவட்ட கல்வி அலுவலர் உதயக்குமார் தலைமையில் நடந்தது.
ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் வரவேற்றார்.தலைமையாசிரியர் நாகேந்திரன் அறிக்கை வாசித்தார். ஒன்றிய தலைவர் பிர்லா கணேசன், மாவட்ட கவுன்சிலர் செந்தில்குமார், உதவி மாவட்ட திட்ட அலுவலர் பீட்டர் லெமாயு, வட்டார கல்வி அலுவலர் மாலதி, ஜெயம் லயன்ஸ் தலைவர் செல்வக்குமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜோசப், மேலாண்மை குழு தலைவர் தேவி, முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் பெரியசாமி, ஆனந்த், எட்வர்ட், பிச்சை முகமது, சூசன்னா,ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
ஆசிரியை ஜெயந்தி தொகுத்து வழங்கினார். உதவி தலைமையாசிரியர் விமலா நன்றி கூறினார்.
