ADDED : மார் 08, 2024 12:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் பாபா அமிர் பாதுஷா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.
முதல்வர் வரதராஜன் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். தாளாளர் பாபா அமிர்பாதுஷா தலைமையுரையாற்றினார். அல் அமிர் கல்வி குழும தலைவர் ஏ.சுலைமான் பாதுஷா, பட்டிமன்ற நடுவர் அப்பச்சி சபாபதி, பேராசிரியர் சுப்பிரமணியன், காரைக்குடி அரபிக் மதரஸா மவுலவி ஏ.அபுபக்கர் சித்திக், மாவட்ட காங். தலைவர் சஞ்சய்காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.
பேச்சு, கவிதை, கட்டுரை, மாறுவேடம், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

