நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் ஓவியம், பேரூராட்சி கவுன்சிலர் நேரு முன்னிலை வகித்தனர்.
தலைமை ஆசிரியர் திருமாமணி ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியை பிரமிளா வரவேற்றார். பேரூராட்சி தலைவர் கோகிலாராணி, வட்டார கல்வி அலுவலர் குமார் பங்கேற்றனர்.
மாணவ,மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. ஆசிரியர்கள் கனகஷீலா, ஷீபா வின்னரசி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.