நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
பள்ளி அதிபர் பாபு வின்சென்ட் ராஜா தலைமை வகித்தார். தமிழாசிரியர் எட்வர்ட் லெனின் வரவேற்றார். தலைமை யாசிரியர் சேவியர் ராஜா அறிக்கை வாசித்தார். மாநில சிறுபான்மை யினர் நல ஆணைய தலைவர் ஜோ.அருண் மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார்.
தாளாளர் தலைமையாசிரியர் சேவியர் ராஜா புத்தகம் வெளியிட்டார். நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், துணை தலைவர் ரமேஷ், உதவி தலைமையாசிரியர்கள் விக்டர் டிசோசா, எட்வின் ராசாரியோ, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.