ADDED : மார் 19, 2026 04:39 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: நாட்டரசன்கோட்டை கண்ணாத்தாள் நர்சரி பள்ளி ஆண்டு விழா நடந்தது. தாளாளர் பிச்சை வரவேற்றார். தமிழ்நாடு ஓட்டல் அசோசி யேசன் துணைச் செய லாளர் வீரப்பன் தலைமை வகித்தார்.
நிர்வாக இயக்குனர் தமிழ்செல்வி பரிசு வழங்கினார். கே.எம்.எஸ்.சி., பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைவர் வி.கே.என்.கண்ணப்பன், சிகப்பி, முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சங்கீதா ஆண்டறிக்கை வாசித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ராஜசேகரன், குணசேகரன், நல்லாசிரியர் பகீரத நாச்சியப்பன், மாவட்ட நர்சரி பள்ளிகளின் தலைவர் ஜெயதாஸ், செயலர் குமார், சாம்பவிகா நர்சரி பள்ளி தலைமை ஆசிரியர் முத்துபஞ்சவர்ணம், எஸ்.ஐ., தமிழரசு, ராமச்சந்திரன் கலந்து கொண்டனர். முன்னதாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் கண் பரிசோதனை முகாம் நடந்தது.
